Wednesday, 25 July 2012

அன்னை மிர்ரா

மகா சக்தி ஸ்ரீ அன்னை “I have a sweet little Mother Who lives in my heart We are so happy together We shall never depart.”                             – The Mother மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே! பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே! வரம் தரும் அன்னையே , வணங்கினோம் உன்னையே! ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே! நதி காய நேராமல் நீருற்று தாயே! நல் நிலம் பார்த்து தாயே! எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே! வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே! என் வளமான தாயே! பசி தாகம்  காணாமல் பயிராக்கு தாயே! ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே! இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே! (மலர் போல…)   புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள திரு குறையாமல் வாழ அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம் தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும் அது திரளாக வேண்டும் பல வீடு பல நாடு பல தேசம் என்று உணராமல் வாழ்வோரை  ஒன்றாக்கு தாயே! உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே! (மலர் போல…) (நன்றி: கங்கை அமரன்)

No comments:

Post a Comment