Wednesday, 25 July 2012

எண் எழுத்து இகழேல்

மொழியின் சிறப்பையும், தன் இனத்தின் வரலாற்றையும் தம் புதிய தலைமுறையினற்கு எடுத்துரைக்கும் சமூகம் மேம்படும். நாகரிகம் வளரும். நாகரிகம் என்பது உடுத்துவதில் அல்ல. பண்பாடென்பது கட்டுப்படுத்துதலிலோ, கட்டுப்படுவதிலோ இல்லை.மொழியின் பெருமையுரைத்தால் பழைமை பேசுவதென்பதா? செம்மொழியென உலகு உரைப்பினும் குழந்தை மம்மி என விளிக்கக் கேட்டு மனம் குளிரும் இனமா நமது. வள்ளுவனும், சைவ வைணவர்களும், சமணர்களும் அழுது தொழுது வளர்த்த தமிழ் இன்று நாகரிகம் எனும் பொய்ப்புயலில் சிக்குவதா? பேசும் மொழியை இகழ்வதா? பெற்ற தாயை பழிப்பதா? ஓதுவோம் தமிழ் நாகரிகமும் பண்பாடும் வரும் தலைமுறையினற்கு. அ ன்னா அறம், அன்பு ஆ வன்னா ஆக்கம், ஆற்றல் இ ன்னா இசை (புகழ்), இன்பம் ஈ ன்னா ஈகை உ ன்னா உண்மை ஊ வன்னா ஊக்கம் எ ன்னா எண்ணம் ஏ வன்னா ஏற்றம் ஐ ன்னா ஐயம் ஒ ன்னா ஒழுக்கம் ஓ வன்னா ஓம் ஔ ன்னா ஔவை

2 comments:

  1. Ippo englishum phonetics peyaril, tamil ku kezha vanthullathu.

    Word Pronunciation:
    Apple - A Sound as "ye"
    Mango - M Sound as "Me"
    Motor - M as "Mo"

    Tamil pathu Copy adikiranga... Usar....

    Now only i'm teaching these letters to Hari....

    ReplyDelete
  2. Nice Profile Picture....
    Where u get it?
    I'm going to publish my another blog sooner..... Regarding My profession...

    ReplyDelete